திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2025 (13:55 IST)

கழிவு நீர் டேங்கில் விழுந்து சிறுமி பலியான சம்பவம்.. 16 நாட்களுக்குப் பின் பள்ளி திறப்பு..!

விக்கிரவாண்டி அருகே உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த நான்கு வயது சிறுமி கடந்த 3ஆம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியை ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட பின் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இதையடுத்து அதிகாரிகள் அந்த பள்ளியை ஆய்வு செய்த நிலையில் அரையாண்டு தேர்வுக்கு பின்னர் தற்போது மீண்டும் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. மாணவி இறந்த 16 நாட்களுக்குப் பிறகு வழக்கு போலீஸ் பாதுகாப்புடன் இன்று பள்ளி திறக்கப்பட்டதாகவும் பள்ளி மாணவர்களை பெற்றோர்களே அழைத்து வந்து பள்ளியில் விட்டதாகவும் கூறப்படுகிறது.

பள்ளியின் பிரேயர் தொடங்கிய பின்னர் இறந்த சிறுமியின் பெற்றோர்கள் தங்களது உறவினர்களுடன் வந்து பள்ளியை முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Edited by Mahendran