ஒரு கோடி ரூபாய் அறிவிப்பு வெளியிட்டு தேடப்பட்ட மாவோயிஸ்ட்.. என்கவுண்டரில் பலி..
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஒருவரை பிடிப்பதற்கு தகவல் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு தொகை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மாவோயிஸ்ட் உள்பட 14 பேர்களை மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் என்கவுண்டர் செய்து கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய நபர் உள்பட பல தீவிரவாதிகளை தேடி வந்த நிலையில், நேற்று திடீரென என்கவுண்டர் நடத்தப்பட்டது. இந்த என்கவுண்டரில், ஒரு கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்த மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் சல்பதி என்பவர் உள்பட 14 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் நிலையாய் உள்ளன.
ஆந்திராவைச் சேர்ந்த சல்பதி மாவோயிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினராக இருந்தது மட்டுமின்றி, ஒடிசா மாநில குழுவின் பொறுப்பாளராக செயல்பட்டு வந்ததாகவும், சத்தீஸ்கர் பகுதியில் பல போராட்டங்களை நடத்தியதாகவும் தெரிகிறது.
தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் சல்பதி கொல்லப்பட்ட இந்த என்கவுண்டர், நாட்டில் மிகப்பெரிய என்கவுண்டர்களில் ஒன்று என்றும், உறுப்பினரை என்கவுண்டர் செய்தது பெரிய சாதனை என்றும், மத்திய பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில், மாவோயிஸ்டுகளுக்கு இது ஒரு பலத்த அடி என்றும், மாவோயிஸ்ட் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் நமது பாதுகாப்பு படை வெற்றி பெற்றுள்ளன என்றும், கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றும் பதிவு செய்துள்ளார்.
Edited by Mahendran