1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 1 டிசம்பர் 2018 (13:40 IST)

பள்ளி மாணவன் பலி : ஓடும் பேருந்தில் இப்படி செய்யலாமா...?

பள்ளி மாணவன் பலி : ஓடும்  பேருந்தில் இப்படி செய்யலாமா...?
சென்னையை அடுத்த எண்ணூர் பகுதில் வசித்து வந்தவர் பாஸ்கரன் ஆவார். இவரது மகன் கபிலன் ( 14) அப்பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை நேரத்தில் வள்ளலார் நகர் மாதவரம் செல்லும் அரசு பேருந்தில் பயணித்த கபிலன் , படியில் தொங்கியபடி சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் திருவொற்றியூரில் மார்கெட் அருகே பேருந்து சென்ற போது சாலையில் வைக்கப்பட்டிருந்த மின் பெட்டியில்  கபிலனின் புத்தகப் பை மாட்டிக்கொண்டதால்   கீழே விழுந்தார்.
 
இதில் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி கபிலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இந்த சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.