திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 ஜனவரி 2019 (14:00 IST)

ஒரே வெட்டில் வேர்ல்டு பேமஸ்: மிட்நைட் அலப்பறை; பர்த்டே பேபியை கொத்தாய் அள்ளிய போலீஸ்

சென்னையில் நள்ளிரவில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ரவுடியை அவரது நண்பர்களுடன் போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
சமீபத்தில் சென்னையில் பிரபல ரவுடி பினு, நள்ளிரவில் பல ரவுடிகள் புடைசூழ தனது பிறந்தநாளை அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடினான். அங்கு போலீஸ் படையுடன் சென்ற காவல் துறையினர் பல ரவுடிகளை கைது செய்தனர். 
 
இந்நிலையில் அதேபோல சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை அயனாவரத்தில் ரவுடியான கிருஷ்ணமூர்த்தி தனது கூட்டாளிகளுடன் நள்ளிரவில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினான். 
 
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து எலிக்குஞ்சுகளை அமுக்குவது போல கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அவனது கூட்டாளிகளை கைது செய்தனர். நள்ளிரவில் நடந்த இந்த சேஸ்சிங் சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.