1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஏப்ரல் 2023 (08:06 IST)

ஆளுநருக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் முன்மொழிகிறார்..!

ஆளுநர் ரவி அவர்களுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில நாட்களாக ஆளுநர் ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக ஆளும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டு வருகின்றன. குறிப்பாக தமிழக அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராதது குறித்தும் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு மற்றும் குடியரசு தலைவரை வலியுறுத்தி இன்று பேரவையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் அரசின் தனி தீர்மானத்தை முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று முன்மொழிய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva