வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2023 (14:25 IST)

பிரதமருக்கும், முதல்வருக்கும் கொலை மிரட்டல்: பள்ளி மாணவன் அதிரடி கைது..

threat
பிரதமர் மோடிக்கும் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கும் பள்ளி மாணவர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து அந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்
 
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா என்ற பகுதியில் இயங்கி வரும் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் இமெயில் ஒன்று வந்தது. அதில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரையும் கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. 
 
இதனை அடுத்து ஊடக நிர்வாகிகள் போலீசில் புகார் செய்ததை அடுத்து சைபர் கிரைம் போலீசார் இது குறித்து விசாரணை செய்தனர். அப்போது பிரதமருக்கும் முதல்வருக்கும் கொலை மிரட்டல் விடுத்தது 16 வயது பள்ளி சிறுவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
பிளஸ் ஒன் முடிந்து விட்டு பிளஸ் டூ வகுப்பில் சேர இருக்கும் அந்த மாணவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran