திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (18:39 IST)

பெரியார் பற்றி படித்த குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா? மீண்டும் சர்ச்சையில் எச்.ராஜா

எப்போதும் எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குபவர் எச்.ராஜா. சமீபத்தில் சைலண்டாக இருந்தவர் தற்போது பெரியாரை பற்றி பேசி விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். 
 
சமீபத்தில், அரியலூரில் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு எச்.ராஜா செய்தியாளர்களிடம் பின்வருமாறு பேசினார், தமிழ்நாட்டிலேயே ஒன்றுக்கும் உதவாமல், தண்டத்திற்கு இருக்கும் ஒரே துறை இந்து அறநிலைத்துறைதான்.
 
ஈ.வே.ரா, மணியம்மை பாடத்திட்டத்தை பற்றி படித்த குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா? இந்த பாடத்திட்டதை புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும். பெரியார் - மணியம்மை குறித்த பாடங்களை படிக்கும் குழந்தைகள் எப்படி ஒழுக்கமாக வளரும். 
 
ஒரு வயதானவர் ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்வதை ஏன் தடுக்கவில்லை என்று குழந்தை கேட்டால் அதற்கு என்ன பதில் உள்ளது? எனவே பெரியார் குறித்த பாடங்களை புத்தகங்களில் இருந்து நீக்கினாலே எல்லாமே சரியாகிவிடும் என கூறியுள்ளார். 
 
மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகள் யாராவது ஒருவரை பிரதமர் வேட்பாளர்களாக காட்ட முடியுமா? மோடிதான் பலசாலி, மக்கள் ஆதரவு உள்ள ஒரே தலைவர் எனவும் வசனங்களை அள்ளிவீசியுள்ளார்.