செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 15 நவம்பர் 2018 (09:07 IST)

கஜா புயல் பற்றி தமிழிசை ட்வீட் – கலாய்த்த நெட்டிசன்

பாஜகவின் தமிழக தலைவர் மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பகிர்ந்த டிவிட்டை நெட்டிசன் ஒருவர் கலாய்த்து உள்ளார்.

பாஜக மிகபெரிய தேசிய கட்சியாக இருந்து நாட்டை ஆண்டு வந்தாலும், வட இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும் தென் இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தாமரை மலர்வதற்கான வாய்ப்பே இல்லை எனும் அளவுக்குதான் நிலைமை உள்ளது.

தமிழகத்தில் பாஜக பிரமுகர்களான தமிழிசை, ஹெச் ராஜா மற்றும் எஸ் வி சேகர் போன்றோர் கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் எதிர்கொண்டு வருகின்றனர். அதுபோலவே அவர்கள் கூறும் எல்லா கருத்துகளும் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகின்றன. அதுபோல கஜா புயல் குறித்து பாஜக தமிழிசை கூறிய கருத்தை நெட்டிசன் ஒருவர் கடுமையாக கலாய்த்து பதில் கூறியுள்ளார்.

தமிழிசையின் டிவிட்டில் ‘கஜா புயல் அச்சுறுத்தக்குள்ளாகியுள்ள நாகை, கடலூர், திருவாரூர் மாவட்ட பாஜகவினரும், மருத்துவ அணியினரும் முன்னின்று மக்களுக்கு வேண்டிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்திருந்தார்.

அந்த டிவிட்டிற்கு பதிலளித்த நெட்டிசன் ஒருவர் ‘ போற உசுரு புயல்லயே போகட்டும்’ எனப் பதிலளித்துள்ளார். இந்த விவகாரம் டிவிட்டரில் வைரலாகி வருகிறது.