திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 மே 2019 (20:13 IST)

அடப்பாவிகளா! இப்படியெல்லாமா போஸ்டர் அடிச்சு ஒட்டுவீங்க!

மதுரையில் குடும்ப சண்டை வீதிக்கு வரும் வகையில் ஒருவர் போஸ்டர் அடித்து தெருத்தெருவாக ஓட்டி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மதுரை செல்லூர் மேலத்தொப்பை பகுதியை சேர்ந்தவர் செ.கர்ணன். இவர் பொது அறிவிப்பு என்கிற பெயரில் போஸ்டர் ஒன்றை அடித்து அவர் குடியிருக்கும் பகுதிகளில் தெருத்தெருவாக ஒட்டியுள்ளார்.
 
அந்த போஸ்டரில், 'நானும் எனது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எனது விருப்பத்திற்கு மாறாக எனது பிள்ளைகளுக்கு காதணி விழா ஏற்பாடு நடைபெறுகிறது. இந்த விழாவுக்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது. ஆகையால் என்னை சார்ந்த உறவுகள் மற்றும் ஏற்கனவே செய்முறை செய்த நபர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று இதன் மூலம் தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
என்னதான் குடும்ப சண்டை என்றாலும் அதனை தெருவுக்கு கொண்டு வரும் வகையில் இப்படியா போஸ்டர் அடித்து ஒட்டுவது? என்று அந்த போஸ்டரை பார்ப்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.