செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 மே 2019 (19:43 IST)

த்ரிஷாவை கைது செய்த போலீசார்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நடிகை த்ரிஷாவை போலீசார் கைது செய்யும் புகைப்படம் ஒன்று சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. இவருடன் நடித்த நடிகைகள் பலர் இன்று அம்மா, அக்கா வேடங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து கொண்டிருக்கும் நிலையில் த்ரிஷா இன்னும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக பிசியாக நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் 'எங்கேயும் எப்போதும்' படத்தின் இயக்குனர் சரவணனின் இயக்கத்தில் த்ரிஷா ஒரு ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். 'ராங்கி' என்று டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் உஸ்பெகிஸ்தானில் நடந்தது
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் உஸ்பெகிஸ்தான் போலீசார் த்ரிஷாவின் கையில் விலங்கு மாட்டி கைது செய்வது போல் உள்ளது. இந்த போஸ்டர் கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது