1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 3 மே 2019 (12:49 IST)

விக்ரம் வேதா இயக்குனர்களின் ’ஏலே’ – புது ஜானரில் கலக்கும் போஸ்டர் !

விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் தயாரிக்கும் புதிய படமான ஏலே படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

விக்ரம் வேதா திரைப்படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியை அடுத்து அதன் இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் அந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளனர். இதற்கிடையில் தமிழில் தங்கள் புதிய தயாரிப்பு நிறுவனமான வால்வாட்சர்ஸை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் புதிய படத்துக்கு ஏலே எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அப்பா மகனுக்கு இடையில் நடக்கும் நகைச்சுவைக் கதையாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. இதனை `பூவரசம் பீப்பீ ' படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்க இருக்கிறார். இப்படத்தில் காதலும் கடந்துபோகும் மற்றும் காலா ஆகியப் படங்களில் நடித்த மணிகண்டன் கதாநாயகனாகவும்  சமுத்திரக்கணி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு இன்று பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது.