புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2019 (13:06 IST)

கோட்சேவுக்கு அதரவு தரும் ஜெயலலிதா கட்சி! – சர்ச்சையான போஸ்டர்!

கோட்சேவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் தோனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ஜெயலலிதா படம் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் ‘ஜெஜெ பார்ட்டி’ என்ற அமைப்பு சமீபத்தில் வீதிகளில் ஒட்டிய போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் “ஒவ்வொருவரும் வன்மம் நிறைந்தவர்கள். திரு.நாதுராம் கோட்சேவை குறை சொல்ல தகுதியுடையவர்கள் யார்?” என கேள்வி கேட்குமாறு வாக்கியம் உள்ளது.

மேலும் கோட்சே இறந்தநாளான இன்று (நவம்பர் 15) அவர் நினைவை போற்றுவோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்சேவுக்கும், ஜெயலலிதாவுக்கும் என்ன தொடர்பு எதற்காக ஜெஜெ கட்சியினர் கோட்சேவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுகிறார்கள் என சமூக வலைதளங்களில் விவாதம் சூடுபிடித்துள்ளது.