பத்திரப்பதிவில் சொத்தின் படத்தையும் இணைக்க வேண்டும்
தமிழகத்தில் பத்திரபதிவில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பத்திரப்பதிவின் போது சொத்தின் படத்தையும் இணைக்க வேண்டும் என்று பதிவுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதில்,
தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலங்களில், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தை ஆவணமாக இணைக்க வேண்டும்.
கட்டிடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே முறைகேடுகளை தடுக்கும் வகையில் பத்திரப்பதிவின் போது சொத்தின் படத்தையும் இணைக்க வேண்டும்; இப்புதிய நடைமுறை அக்டோபர் 1 ஆம் தேதிமுறை அமலுக்கு வருகிறது என பதிவுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.