ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (09:16 IST)

தமிழக பாஜக தலைவர் யார் ? – சீனியர்களை ஓரங்கட்டிய ஏ பி முருகானந்தம் !

தமிழிசைப் பதவி விலகலுக்குப் பின்  அடுத்த பாஜக தலைவராக ஏபி முருகானந்தம் நியமிக்கப்படவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.

தமிழகத்தில் பாஜகவின் முகமாக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தமிழகத்தில் பாஜகவின் அடுத்த தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்தபதவிக்கு ஹெச் ராஜா, கேடி ராவன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் போன்ற முன்னணித் தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவில் அடுத்த தலைவர் யார் என்கிற பட்டியலில் பலரது பெயர் அடிபட்டாலும் ஏ பி முருகானந்தத்தை நியமிப்பதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப் படுகிறது. இவர் இப்போது தேசிய பாஜக துணைத் தலைவராக இருக்கிறார். மேலும் தேசியப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். மோடி மற்றும் அமித் ஷாவிடம் இவருக்கு நல்ல பெயர் இருப்பதால் இவருக்கே அந்தப் பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.