செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2019 (21:12 IST)

என் மீது வீசப்பட்ட கற்களால் கோட்டை கட்டி விட்டேன்: தமிழிசை

தமிழக அரசியல்வாதிகளில் அதிகமாக கலாய்க்கப்பட்டவர் அனேகமாக முன்னாள் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜனாகத்தான் இருக்கும். ஆனால் அவர் இன்று பெற்றுள்ள பதவியை தமிழகத்தை சேர்ந்த எந்த ஒரு பெண்ணும் பெற்றிருக்கவில்லை. அந்த உயரத்திற்கு அவர் சென்றுவிட்டார்.
 
இந்த நிலையில் வரும் 8ஆம் தேதி தெலுங்கானா கவர்னராக பதவியேற்கவிருக்கும் தமிழிசை செய்தியாளர்களிடம் மிகவும் உருக்கமாக பேசினார். அவர் பேசியவற்றின் தொகுப்பை தற்போது பார்க்கலம
 
* மீம்ஸ் கிரியேட்டேர்கள் என்னை கஷ்டபடுத்த நினைத்து, தோற்று போய்விட்டனர்  என் மீது வீசப்பட்ட கற்களை வைத்து கோட்டை கட்டி விட்டேன்
 
* திமிங்கலங்கள் இல்லாத கடலில் எனக்கு நீந்த பிடிக்காது, திமிங்கலங்கள் இருந்தால் தான் பிடிக்கும், அதுபோன்று தான் அரசியல், நான் ஆளுநர் இல்லை சாதாரண ஒரு பெண்
 
* நான் குள்ளமாக இருப்பதை விமர்சிப்பார்கள், அதை பற்றியெல்லாம் கவலைபட்டதே இல்லை 
 
* நான் சாதிக்கவில்லை, சாதாரண ஒரு பெண், எனக்கு கொடுத்த வேலையை மட்டுமே செய்தேன்
 
* மேதகு என்பதை விட பாசமிகு என்று அழைப்பதையே விரும்புகிறேன்