திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஜூலை 2018 (20:16 IST)

ஜல்லிக்கட்டு காளை வயிற்றில் 15 கிலோ பிளாஸ்டிக் கழிகவுகள்!

மதுரை அருகே ஜல்லிக்கட்டு காளை வயிற்றில் இருந்து 15 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

 
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அடுத்த மாரணி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவரது ஜல்லிக்கட்டு காளைக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
 
சோதித்து பார்த்தபோது, காளையின் இரைப்பையில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் மதுரை கால்நடை மருத்துவப்பல்கலைக்கழக பயிற்சி மைய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
 
இந்த அறுவை சிகிச்சை மூலம், காளையின் வயிற்றில் இருந்த 15 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றப்பட்டது.