புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 ஜூன் 2018 (15:03 IST)

எராளமான பெண்களை சீரழித்தவன் கொடூரக் கொலை

கன்னியாகுமரியில் ஏராளமான பெண்களை சீரழித்தவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டிரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு தேனாம்பாறையை சேர்ந்தவர் ஸ்டான்லி ஜோன்ஸ்(48). இவருக்கு திருமணமாகி கபின், சுமிதா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.
 
இந்நிலையில் எந்நேரமும் குடிப்பதும், மற்ற பெண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜோன்ஸை அவரது மனைவி விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். ஆனாலும் திருந்தாத ஜோன்ஸ் குடிப்பதும் பல பெண்களை சீரழிப்பதுமாய் இருந்துள்ளார்.
 
இந்நிலையில் ஜோன்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் யாரோ அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்த போலீஸார் ஜோன்ஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜோன்ஸை கொலை செய்த குற்றவாளிகளை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.