1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 ஜூன் 2018 (12:19 IST)

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - தட்டிக் கேட்ட மனைவியின் கழுத்தை அறுத்து கொலை

பெற்ற மகளை பாலியல் இச்சைக்கு ஆளாக்கிய கணவனை போலீஸில் பிடித்துக் கொடுத்த கோபத்தில், பெண்ணின் கணவன் அவரை கோர்ட்டில் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்சாம் மாநிலத்தை சேர்ந்த புர்னா நாகர் தேகா என்ற கயவன் பெற்ற மகள் என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் தன் கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
இதனால் அந்த அயோக்கியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். பின் ஜாமினில் வெளியே வந்த அவனை மனைவி வீட்டில் அனுமதிக்க மறுத்துவிட்டார்.
 
இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தன் மனைவியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தான். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவனது மனைவி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
அப்பாவியான என் மீது பழி சுமத்தி போலீஸில் பிடித்துக் கொடுத்ததால் தான் அவளை கொலை செய்தேன் என புர்னா நாகர் தேகா வாக்குமூலம் அளித்துள்ளான்.