திங்கள், 10 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 மார்ச் 2019 (10:59 IST)

செம போதையில் பெயிண்ட்டை குடித்த நபர்: கடைசியில் நடந்த விபரீதம்!!!

பாபநாசத்தில் நபர் ஒருவர் போதையில் பெயிண்ட்டை குடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
பாபநாசம் அருகே வங்காரம்பேட்டையை சேர்ந்தவர் குமார். இவர் பெயிண்டர் ஆவார். குமார் போதை பழக்கத்திற்கு அடிமையாகியதால் எந்நேரமும் குடித்துக் கொண்டே இருப்பார். அப்படி மதுபோதையில் இருந்த குமார் பெயிண்ட் என நினைத்து வீட்டிலிருந்த பெயிண்ட்டை எடுத்து குடித்துவிட்டார்.
 
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.