பாம்புக்காக சொந்த வீட்டை கொடுத்தவர்கள்! – தஞ்சையில் ஆச்சர்யம்!

snake
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 1 நவம்பர் 2019 (15:26 IST)
தஞ்சையில் பூர்வீக வீட்டில் பாம்பு ஒன்று வாழ்ந்து வந்ததால் அந்த பாம்பிற்காக தனது வீட்டையே கொடுத்துள்ள நபர் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தஞ்சை அருகே பசுபதிகோயில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். புடவை வியாபாரம் செய்து வரும் இவருக்கு மணல்மேட்டுத்தெருவில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. ஆனால் அந்த வீட்டில் 17 ஆண்டுகளாக ஒரு நாகபாம்பு வாழ்ந்து வருகிறது. அந்த நாகப்பாம்புக்காக அந்த வீட்டையே 17 ஆண்டுகளாக உபயோகிக்காமல் வைத்துள்ளனர் பிரகாஷ் குடும்பத்தினர்.

மேலும் அந்த பாம்பு வாழும் புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்டும் வருகின்றனர். பாம்பிற்காக வீட்டையே கொடுத்துள்ள சம்பவம பலரை ஆச்சர்யப்படுத்த அதன் காரணத்தை விளக்கியுள்ளார் பிரகாஷ்.

அவர் சிறு வயதில் அந்த வீட்டில் தன் பெற்றோருடன் தங்கியிருந்தபோது நல்ல பாம்பு ஒன்றை அவரது அம்மா அடித்து கொன்றுவிட்டாராம். அதன்பிறகு வீட்டிற்குள்ளேயே புற்று ஒன்று வளர அதற்குள் மற்றொரு நல்ல பாம்பு இருந்திருக்கிறது. அதை தொந்தரவு செய்ய வேண்டாமென முடிவெடுத்த பிரகாஷின் பெற்றோர்கள் அந்த வீட்டை அப்படியே விட்டுவிட்டார்கள்.

தற்போது அந்த பகுதியில் அந்த புற்று இருக்கும் வீட்டை பலரும் சென்று வணங்கி வருகிறார்களாம்.இதில் மேலும் படிக்கவும் :