1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated: வெள்ளி, 26 மே 2023 (16:17 IST)

காதலியின் கருவை கலைத்து, வேறொரு பெண்ணை 2 வதாக திருமணம் செய்த நபர் கைது

marriage obstacles
காதலியின் கருவை கலைத்துவிட்டு, வேறொரு பெண்ணை 2 வதாக திருமணம் செய்த மெக்கானிக்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள எல்.என்புரம் என்ற பகுதியில் வசிப்பவர் ரவி. இவர்,  சென்னை சாலையில் இருசக்கர வாகன கடை  ஒன்றை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் சக்கரபாணி மகன் சுப்பிரமணியன்(31) வேலை பார்த்து வந்தார்.  இந்த நிலையில் ரவியின் மகள் ரம்யாவிற்கும் சுப்பிரமணியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

பின்னர், இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்த நிலையில், ரம்யா கர்ப்பமானார். இதையறிந்த சுப்பிரமணி கருவை கலைக்கும்படி வற்புத்தி கலைத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 27 ஆம்  தேதி சுப்பிரமணியனுக்கும், கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்  ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதுபற்றி அறிந்த ரம்யா தன்னை ஏமாற்றிய சுப்பிரமணியன் மீது போலீஸில் புகாரளித்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் சுப்பிரமணியனுக்கும், பாதிரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடலூர் மஞ்சக்குப்பத்தில் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்குச் சென்று மணக்கோலத்தில் இருந்த சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். காதலியின் கருவை கலைத்துவிட்டு, 2 வது திருமணம் செய்த அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.