வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2022 (17:57 IST)

அவர்களை உறுதியாகச் சந்தித்து ஆசிகள் பெறுவோம் - ஓ.பன்னீர்செல்வம்

எம்ஜிஆருடன் இருந்தவர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவோம் என்று முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் எனப் பிரிந்திருந்த நிலையில் சசிகலா, தினகரனை கட்சியைவிட்டு நீக்கியபின், இருவரும் இணைந்து பணியாற்றி வந்தனர்.

இரு தரப்பினர்க்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் மோதல் போக்குகளும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி மூன்று அணிகளாக உள்ளது.

நேற்று, அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.  அடுத்த, சில நிமிடங்களில் அதிமுகவிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

அரசியல் ஆலோசகராக ஓபிஎஸ் அவர்களால் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமித்த நிலையில் எடப்பாடிபழனிசாமி அதிரடியாக அவரை கட்சியிலிருந்து நீக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில்,சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது  இல்லத்தில் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ்,  மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து அவரிடம் ஆலோசனைகள் பெற வந்தேன்.  எம்ஜி ஆர் காலம் முதல் இன்று வரையிலான அனுபவங்களை வழங்கினார். எம்.ஜி,.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் இருந்தவர்களை உறுதியாகச் சந்தித்து அவர்களின் ஆசிககள் பெறுவோம் என்று தெரிவித்தார்.