1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 ஜூலை 2018 (11:07 IST)

தாய் இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட மகன்

அம்மா இல்லாத உலகத்தில் நான் இருக்க மாட்டேன் என தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் மேலமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (80). இவரது கணவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் கடைசி மகன் சிவாஜி செல்வரங்கனின் (58), மனைவி இறந்ததால் அவர் தனது தாயுடன் வசித்து வந்தார்.
 
கடந்த ஞாயிறன்று உடல் நலக்குறைவால் அவரது தாய் உயிரிழந்துவிட்டார். தனலட்சுமியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. தாயின் பிரிவை தாங்க முடியாத சிவாஜி, புலம்பிக் கொண்டே இருந்தார்.
 
இந்நிலையில் அம்மா இல்லாத உலகத்தில் இனி நாம் இருக்கக்கூடாது எனக் கருதி நேற்று சிவாஜி குருணை மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் ஆரப்பாளையம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.