ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (10:13 IST)

10 லட்சம் வரதட்சணைக்காக பெண்ணை எரித்துக் கொல்ல முயற்சி

திருவாரூரில் வரதட்சணைக் கொடுமையில் பெண் ஒருவரை எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் வாசன் நகரைச் சேர்ந்தவன் கிஷோர். இவனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயநந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
 
இந்நிலையில் கிஷோர் தன் மனைவியிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி வந்துள்ளார். 10 லட்சம் கொடுக்காவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என கூறி கிஷோர் ஜெயந்தியினியை தன் குடும்பத்தினரோடு சேர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
 
பணத்தாசை பிடித்த கிஷோர் நேற்று ஜெயந்தினியை அரிவாளால் வெட்டியுள்ளார். அத்துடன் அவர் மீது  மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்த முயன்றுள்ளார். இதனால் ஜெயந்தினி அலறியுள்ளார். ஜெயந்தினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் கிஷோரிடமும் அவனின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணத்தாசை பிடித்த இவனுக்கும் இவனின் குடும்பத்தாருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.