வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 ஜூன் 2019 (10:11 IST)

சென்னையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர் – இரண்டு போலீஸுக்கு அரிவாள் வெட்டு

சென்னையில் பிரபல ரவுடையை போலீஸ்காரர்கள் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் வல்லரசு. பிரபல ரவுடியான இவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவரை போலீஸார் தேடி வந்துள்ளனர். தலைமறைவாக இருந்து வந்த வல்லரசை நேற்று வியாசர்பாடி மேம்பாலம் அருகே போலீஸார் வளைத்து பிடித்தனர். உடனே வல்லரசு போலீஸாரை சரமாரியாக வெட்ட தொடங்கியுள்ளார். பாதுகாப்பிற்காக போலீஸார் அவரை சுட்டு கொன்றனர்.

காயம்பட்ட போலீஸார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரபல ரவுடி சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.