14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!
தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று எனவே அந்த பகுதியில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Mahendran