மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ: தீயணைப்பு படையினர் விரைவு
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி குவித்து வைத்துள்ள யார்டில் என்ற பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த நிலக்கரி எரிந்தபோது கன்வேயரும் சேர்ந்து இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த தீ விபத்து குறித்து தகவல் தெரிந்ததும் மேட்டூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில் ஒரு அலகில் 210 மெகாவாட் வீதம் நான்கு அளவுகளில் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் தேவை குறைவாக இருந்ததால் 630 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது