திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (07:56 IST)

மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 4 நோயாளிகள் உடல்கருகி மரணம்!

மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து
மும்பையில் உள்ள தானே என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நான்கு நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மும்பையில் உள்ள தானே என்ற பகுதியில் இன்று அதிகாலை சுமார் 03.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் மும்பையில் உள்ள தீயணைப்பு துறையினர் மருத்துவமனைக்கு விரைந்தனர். தீ மளமளவென பரவியதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் மிகவும் கஷ்டப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்
 
இந்த நிலையில் இதுவரை வெளிவந்த தகவலின்படி மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உடல் கருகி உயிர் இருப்பதாகவும் ஒரு சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் தீ விபத்து காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மட்டும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. மற்ற நோயாளிகள் அதே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்