திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 31 மே 2024 (12:51 IST)

இரண்டரை வயது குழந்தையை கடித்துக் குதறிய நாய்..!! கன்னத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி..!!

Dog Bite
சென்னையில் இரண்டரை வயது குழந்தையை நாய் கடித்து குதறியதில் கன்னத்தில் காயமடைந்த நிலையில்,  அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.  
 
சென்னை  அண்ணாநகர் ஜீவன் பீமா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.  இந்த நிலையில்,  கடந்த திங்கள்கிழமை மாலை சிறுமி யாஷிகா வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.
 
அப்பொழுது எதிர்பாராத விதமாக சாலையில் சுற்றித் திரிந்து நாய் ஒன்று சிறுமியின் மேல் தாவி கன்னத்தில் கடித்து குதறியது.  சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவருடைய தாய் பிரதீபா,  சுமார் 20 நிமிடம் போராடி நாயிடமிருந்து சிறுமியை மீட்டார்.
 
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிறுமிக்கு கன்னத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், பெற்றோர் சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.  

 
பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாகவே,  சாலையில் சுற்றி திரியக்கூடிய நாய்களை மாநகாட்சி அதிகாரிகள் ஊழியர்களை வைத்து பிடித்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும்,என சிறுமியின் தந்தை தங்கப்பாண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.