திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (21:30 IST)

பேருந்து மீது ஏறி கலாட்டா செய்த சட்டக் கல்லூரி மாணவருக்கு நூதனை தண்டனை!

அரசு பேருந்தில் மீது ஏறி கூச்சல் எழுப்பி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அந்த மாணவருக்கு நூதனை தண்டனை வழங்கியுள்ளது
 
சென்னை புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் படிக்கும் துரைராஜ் என்ற மாணவர் பச்சையப்பன் கல்லூரி வகுப்பு ஆரம்பித்த முதல் நாளில் பஸ் டே என்ற பெயரில் பேருந்தில் மீது ஏறி கூச்சல் எழுப்பி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து அயனாவரம் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டது.
 
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக் கல்லூரி மாணவரான தன்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் என நினைத்து வழக்குப் பதிவு செய்துள்ளார்கள் என மாணவர் துரைராஜ் கூறியதோடு தன்னுடைய கல்லூரி அடையாள அட்டையையும் காண்பித்தார்
 
மாணவர் துரைராஜ் என்பவர் பச்சையப்ப கல்லூரி மாணவர் இல்லையென்றாலும் அவர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்துள்ளது நிரூபிக்கப்பட்டது. இருப்பினும் மாணவரது எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் கல்லூரியில் 10 மரக்கன்றுகளை நட்டு, ஒரு மாதத்திற்கு தண்ணீர் ஊற்றி அவற்றை பராமரிக்க வேண்டும் என்றும், தான் பராமரிக்கும் மரக்கன்றுகளின் விவரங்களை கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் துரைராஜ் மீதான வழக்கை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். மாணவருக்கு வழங்கப்பட்ட இந்த நூதன தண்டனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது