புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (22:30 IST)

மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க அட்டைப்பெட்டி முகமூடி:

தேர்வு நேரத்தில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பல்வேறு வழிமுறைகளை பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் செய்வதுண்டு என்பது தெரிந்ததே. தேர்வு கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை, சிசிடிவி கேமிரா உள்பட பல முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன
 
இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தேர்வு எழுதும் மாணவர்களின் முகத்தில் ஒரு அட்டைப்பெட்டியை வைத்து விடுகின்றனர். அந்த அட்டைப்பெட்டியில் ஒரு பக்கம் மட்டுமே பார்ப்பதற்கு வழி இருக்கும். மற்ற பக்கங்கள் அட்டைகளால் மூடப்பட்டிருக்கும். எனவே பக்கத்தில் உள்ள மாணவர் என்ன செய்கிறார் என்பதை கூட பார்க்க முடியாது.
 
இந்த கல்லூரியில் மாணவர்கள் முகத்தில் அட்டைப்பெட்டி முகமூடியை போட்டுக்கொண்டு தேர்வு எழுதிய விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் மாணவர்களை இந்த கல்லூரி நிர்வாகம் கொடுமைப்படுத்தியுள்ளதாகவும் இது மனித உரிமை மீறல் என்ற வகையிலும் சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த கல்லூரி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன