திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: சனி, 12 ஜனவரி 2019 (08:47 IST)

கள்ளக்காதல் மோகம்: பெற்ற தாயை எரித்துக் கொன்ற மகள்

சென்னை தாம்பரத்தில் பெற்ற தாயை மகளே  தனது  கள்ளக்காதலனுடன் தீவைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சென்னை தாம்பரம் சானிடோரியத்தைச்  சேர்ந்த பெண் பூபதி (வயது 60) . இவருக்கு மமகள் நந்தினி (வயது 26) அவரின் கணவர் கண்ணனுடன் அதே வீட்டில் வசித்து  ஒன்றாக வசித்து வந்தனர்,
 
இந்த நிலையில் கடந்த 7 தேதி வீட்டு வேலை செய்துவிட்டு வீட்டிற்கு  வந்த தாய் பூபதி  பகல் நேரத்தில் அசதிகாரணமாக வீட்டில் படுத்து உறங்கியபோது தானாக தீப்பற்றி எரிந்ததாக  இளைய மகள் நந்தினி  கதறி அழுதார்,  
 
மேலும் பேச்சு முச்சற்ற நிலையில் அவரை தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்று மாலை அவர் உயிரிழந்தார்,
 
 இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர. பூபதி உடலில் தானாக தீப்பற்ற என்ன காரணம்? கடைசி மகள் நந்தினி செயல் பாட்டில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் போலீசார் கிடுகிபிடி விசாரணையில் திருநீர்மலையை சேர்ந்த  முருகன்(வயது-46)  என்பவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது இதனை அறிந்த தாய் பூபதி மகளை கண்டித்ததாகவும்  அதனால் தாய் பூபதியை ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ய நந்தினி திட்டமிட்ட நிலையில்  அசதியில் படுத்து  உறங்கிய தாய் பூபதி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

இதில் பலத்த தீ காயமடைந்த பூபதியை மீட்பதுபோல பொய்யாக கண்ணீர் விட்டுகலங்கிய படி நாடகமாடிய நந்தினி செயல் அன்று யாருக்கும் தெரியவில்லை,   இதில் சிகிச்சை பலனின்றி தாய் பூபதி இறந்த நிலையில், குரோம்பேட்டை போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் இளைய மகள் நந்தினியும் அவரது ஆண் நண்பர் முருகனையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.