சென்னையில் விஸ்வாசத்தை முந்திய பேட்ட!

Last Updated: வெள்ளி, 11 ஜனவரி 2019 (15:43 IST)
ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு மாஸ் திரைப்படங்களும் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இந்த இரு படங்களின் சென்னை வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. சென்னையில் பேட்ட திரைப்படம் நேற்றைய முதல் நாளில் ரூ.1.12 கோடியும், விஸ்வாசம் நேற்று ஒரே நாளில் ரூ.88 லட்சமும் வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


'பேட்ட' திரைப்படத்தின் முதல் காட்சி 4 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில் சென்னையின் பெரும்பாலான திரையரங்குகளில் விஸ்வாசம் திரைப்படம் அதிகாலை 1 மணிக்கு கூடுதலாக ஒரு காட்சி திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பேட்ட, விஸ்வாசம் படத்தை விட அதிக வசூல் செய்திருந்தாலும் தமிழக அளவில் விஸ்வாசம்தான் அதிக வசூலை முதல் நாளில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :