திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (11:02 IST)

ஹெலிகாப்டரில் பணம் எடுத்துச் சென்றார் அண்ணாமலை: காங்கிரஸ் பிரமுகர் குற்றச்சாட்டு..!

Annamalai
கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் அண்ணாமலை ஹெலிகாப்டரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணமூட்டையை எடுத்துச் சென்றதாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது சொத்து பட்டியல் வெளியிட்டு ஊழல் குற்றம் சாட்டினார் என்பதும் அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அண்ணாமலை கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்து வரும் நிலையில் கர்நாடக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஹெலிகாப்டரில் பணம் மூட்டைகளை அண்ணாமலை கொண்டு வந்தார் என காங்கிரஸ் கட்சியின் வினய்குமார் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். 
 
இதற்கு பதில் அண்ணாமலை அளித்துள்ளபோது, ‘கால விரயத்தை குறைப்பதற்காக ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன் என்றும் தோல்வி வயத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எங்கள் மீது குற்றம் காட்டுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran