வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 22 மே 2024 (13:18 IST)

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு எதிராக பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகார்.. என்ன காரணம்?

yutuber ttf  vasan
சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர வாகன உதிரிபாக கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு சொந்தமாக வாகன உதிரிபாக கடை உள்ளது. இந்த கடையில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக புகார் எழுந்த நிலையில் இந்த புகார் குறித்து அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
யூடியூபர் டிடிஎஃப் வாசனின் கடை குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், மேலும் டிடிஎஃப் வாசனின் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த போலீசார், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தியதாகவும் தெரிகிறது.
 
யூடியூபர் டிடிஎஃப் வாசன், அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு என்ன பதில் அளிக்க போகிறார் என்பதை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
 
Edited by Mahendran