1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (08:21 IST)

மு.க. ஸ்டாலின் மீது புதிய வழக்கு: சென்னை காவல்துறை அதிரடி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் மாநில அளவில் பந்த் மற்றும் போராட்டங்களை நடத்தினர். இதில் சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற மறியல் போராட்டத்தை அடுத்து மு.க. ஸ்டாலின் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இதுபோன்ற வழக்குகள் தங்களது போராட்டத்தை தடைசெய்ய முடியாது என்று திமுக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.