1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2024 (10:14 IST)

பரந்துர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருக்கு சம்மன்.. 636வது நாளாக நீடிக்கும் போராட்டம்!

பரந்துர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் பரந்தூரில் 636வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.
 
சமீபத்தில் மக்களவை தேர்தலின்போது தேர்தல் பணி செய்ய வந்த தாசில்தாரை தடுத்ததாக, ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்று நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
 
வாக்குப்பதிவன்று அரசு ஊழியர்களை வாக்களிக்குமாறு அழைக்கச் சென்ற தாசில்தார் சுந்தரமூர்த்தியுடன் வாக்குவாதம் செய்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், சுங்குவார் சத்திரம் காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராகுமாறு 10 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 636வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இந்த போராட்டம் காரணமாக மக்களவை தேர்தலில் பொதுமக்கள் யாரும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran