பிரதமர் மோடியின் வாகனப் பேரணியில் விதிமீறல்.! போலீசார் வழக்குப்பதிவு..!!
சென்னையில் பிரதமர் மோடியின் வாகன பேரணியின் போது சாலைகளில் எவ்வித அனுமதியும் இன்றி விளம்பரப் பதாகைகள் வைத்ததாக கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த நரேந்திர மோடி நேற்று சென்னை தி.நகரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திநகரில் பிரதமர் மோடியை வரவேற்று சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான தொண்டர்கள் கோஷமிட்ட நிலையில் சாலையில் விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டது.
இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட படியே பிரதமர் மோடி பயணித்தார்.
சாலைகளில் எவ்வித அனுமதியும் இன்றி விளம்பரப் பதாகைகள் வைத்ததாக தேர்தல் அதிகாரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாண்டி பஜார் மற்றும் மாம்பலம் ஆகிய காவல் நிலையங்களில் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாலையில் அத்துமீறி இந்த பேனர்களை வைத்தது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்