வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (11:35 IST)

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையா?

இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதும் 700க்கும் அதிகமானவர்களுக்கு இதுவரை ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையிலும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கூட புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதித்து காவல்துறை அறிவித்துள்ளது என்பதை பார்த்தோம் 
 
ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை எதிர்க்கட்சிகள் கண்டித்து வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
 
இந்த முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற இந்த முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை ஒரு திறந்து பார்ப்போம்.