1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 21 மே 2022 (07:55 IST)

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: முன்னாள் அதிமுக அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

sampath
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: முன்னாள் அதிமுக அமைச்சர் மீது வழக்குப்பதிவு!
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடலூர் பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதை கண்டித்து நேற்று அதிமுக சார்பில் போராட்டம் செய்யப்பட்டது 
 
இந்த போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத் உள்பட 1,500 பேர் கலந்து கொண்டனர் 
 
இந்தநிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக புதுநகர் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் சம்பத் மற்றும் 1500 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது