தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்: கோவையில் அதிர்ச்சி சம்பவம்
கோவையில் தங்கையை அவரது சகோதரரே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தெலுங்குபாளையம் பகுதியை சிறுமி ஒருவர் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி உடலில் சில மாற்றங்கள் ஏற்படவே அவரது பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனைக்கேட்டு சிறுமியின் பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர். சிறுமியிடம் விசாரித்ததில், அவரது அண்ணணே இந்த கொடுமையை செய்தது தெரியவந்தது. ஆனால் அவரின் பெற்றோர் இதுகுறித்து புகார் அளிக்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு நல மைய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த சிறுமியின் அண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.