தொடர்புடைய செய்திகள்
- மெரீனாவை அடுத்து பெசண்ட் நகர் கடற்கரையிலும் போலீஸ் குவிப்பு
- வேண்டுமென்றால் கடல் நீரைக் குடியுங்கள்; சுப்பிரமணியன் சாமியின் திமிர் பேச்சு
- காவிரி விவகாரம்; போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது
- காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க தி.மு.க சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது
- தமிழக ஆட்சியாளர்களுக்கு தான் கேட்கவில்லை, மத்தியில் இருப்போருக்காவது கேட்கட்டும்; கமல்ஹாசன்
ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபரின் கைவரிசையால் பரபரப்பு
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடந்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிரான போராட்டம், ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டம், நியூட்ரியோனா திட்டத்தை எதிர்த்து போராட்டம் என எங்கு பார்த்தாலும் போராட்டமயமாக உள்ளது.
இந்த நிலையில் திமுக இந்த போராட்டங்களில் வெகுதீவிரமாக உள்ளது. நேற்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் இன்று முதல் 4ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் போராட்டங்கள், 5ஆம் தேதி முழுகடையடைப்பு போராட்டங்கள் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர் போராட்டங்களை திட்டமிட்டு வருகிறார்
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டில் குண்டு வீசுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் போன்கால் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் மிரட்டல் விடுத்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
