1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. a big pathole near mandhaiveli bus depot

மந்தைவெளி அருகே மிகப்பெரிய பள்ளம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

மந்தைவெளி
மந்தைவெளி அருகே மிகப்பெரிய பள்ளம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் பள்ளம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் மந்தைவெளி பஸ் டெப்போ அருகே ராமகிருஷ்ணா மடம் அருகே மிகப் பெரிய பள்ளம் ஒன்று திடீர் என ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் 
 
சென்னையில் ஏற்பட்ட பள்ளங்களிலேயே இதுதான் பெரிய பலமாக இருக்கும் என்று அந்த பகுதி மக்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இந்த பள்ளத்தை சிமெண்ட் காங்கிரட் போட்டு மூடி வரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
கர்நாடகாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு?