கேக் வாங்கினால் பெட்ரோல் இலவசம்! – பேக்கரி அறிவிப்பால் குவிந்த கூட்டம்!
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில் திருச்சியில் கேக் வாங்கினால் பெட்ரோல் இலவசம் என அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ நெருங்கி வரும் நிலையில் பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அன்றாட பொருட்கள் விலை உயரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சியில் உள்ள பேக்கரி ஒன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேக்கரியில் ரூ.600 முதல் ரூ.1500 வரை பல்வேறு விதமான கேக்குகள் உள்ளன, இந்நிலையில் இந்த கேக்குகளை வாங்குபவர்களுக்கு 1 லிட்டர் முதல் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. கேக் வாங்குபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அதை கொண்டு குறிப்பிட்ட பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம். இதற்கு மக்கள் பெருமளவில் ஆதரவு தருவதாக கூறப்படுகிறது.