9 பிரிவுகளில் வழக்கு: முன் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் மனு தாக்கல்!
முன்னாள் அதிமுக அமைச்சர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனையில் பண்ருட்டியை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் என்ற விவசாயியை தாக்கியதாக தெரிகிறது.
இதை அடுத்து முன்னாள் அமைச்சர் சம்பத் மற்றும் அவரது சகோதரர் தங்கமணி உள்ளிட்ட 14 பேர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்சி சம்பத் தன்னை கைது செய்யாமல் இருக்க ஜாமீன் கோரி கடலூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிகிறது.
Edited by Mahendran