1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 ஜூன் 2018 (07:42 IST)

தமிழிசையை தாக்க முயன்ற இளைஞர் கைது

பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய  தமிழக பாஜக தலைவர் தமிழிசையை, இளைஞர் ஒருவர் தாக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிங்கபெருமாள் கோவிலில், பாஜக சார்பில் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமை தாங்கினார். 
 
இந்நிலையில் தமிழிசை மேடையில் அமர்ந்திருந்த போது மேடையில் வேகமாக ஏறிய இளைஞர் ஒருவர், தமிழிசையை தக்க முற்பட்டார். உடனடியாக அங்கு இருந்த தொண்டர்கள், அந்த இளைஞரை தடுக்க முயன்றனர். இருந்த போதிலும் அந்த இளைஞர் தொண்டர்களை சரமாரியாக தாக்கினார்.
உடனடியாக அங்கு வந்த போலீஸார், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அந்த வாலிபர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் அந்த வாலிபரை கைது செய்தனர். இதனால் அக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.