1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (15:58 IST)

இருசக்கர வாகனத்தில் புகுந்த 6 அடி நிளம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கவிதா(36) இவர் தனக்கு சொந்தமாக விவசாய நிலம் முள்ளுக்குறிச்சி பகுதியில் உள்ளது.
முள்ளுக்குறிச்சி பகுதியில் உள்ள  விவசாய நிலத்திற்கு சென்று விட்டு  வீடு திரும்பியுள்ளார்.
 
அப்போது இரு சக்கர வாகனத்தில் இருந்து பாம்பு சத்தம் கேட்டுள்ளது. இதனை அறிந்த கவிதா இருசக்கர வாகனத்தில் பாம்பை உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இருசக்கர வாகனத்தின் பாகங்களை பிரித்து 1 மணி நேரத்திற்கு மேலாக பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 
 
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 6 அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பினை உயிருடன் மீட்டு சாக்கு பையில் அடைத்து காப்பு காட்டு பகுதியில் விடுவித்தனர்.