ரூ.5000 கரண்ட் பில் வருகிறதா? மின் வாரியத்தின் புதிய அறிவிப்பு..!
ரூபாய் 10 ஆயிரம் மின் கட்டணம் செலுத்துவதாக இருந்தால் ரொக்கமாக மின்வாரிய அலுவலகத்தில் செலுத்த முடியாது என்றும் காசோலை அல்லது டிராப்ட் மூலம் தான் செலுத்த முடியும் என்ற விதிமுறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்பது தெரிந்தது. இந்த நிலையில் தற்போது இதில் பத்தாயிரம் என்பது 5000 என மாற்றப்பட்டுள்ளதாக மின்வாரிய துறை தெரிவித்துள்ளது.
இதன்படி பத்தாயிரம் வரை மட்டுமே ரொக்கம் பெறப்படும் என்ற விதிமுறை தற்போது மாற்றப்பட்டு இது 5000 என குறைக்கப்பட்டுள்ளது. எனவே 5 ஆயிரத்திற்கும் மேல் மின்கட்டணம் இருந்தால் அதை காசோலை அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலமே செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் உத்தரவுபடி மின்னணு பரிவர்த்தனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த இலக்கு குறைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. எனவே மின்வாரிய அலுவலக கவுண்டர்களில் இனி 5000 க்கு மேல் மின் கட்டணம் ரொக்கமாக செலுத்த முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் ஆன்லைனில் செலுத்துவதற்கு கட்டுப்பாடு இல்லை என்றும் வழக்கம் போல் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றின் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
எனவே மின் கட்டணம் செலுத்த மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும் வாடிக்கையாளர்கள் காசோலை அல்லது டிமாண்ட் டிராப்ட் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva