செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2024 (09:42 IST)

நேற்று கொடுத்த அனுமதி இன்று ரத்து! சதுரகிரிக்கு செல்ல தடை! - பக்தர்கள் அதிர்ச்சி!

sathuragiri

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல நேற்று அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இன்று தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

 

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி! ஆனால் ஒரு நிபந்தனை..
 

சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்கு பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. அப்போதைய சூழலை வைத்து சதுரகிரி மலையேற்றத்துக்கு பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

 

இந்நிலையில் இந்த மாதம் பௌர்ணமி மற்றும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று முதல் 20ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறை நேற்று அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனால் பக்தர்கள் இன்று காலை 5 மணி அளவிலேயே மலை அடிவாரத்தில் காத்திருக்க தொடங்கினர்.

 

ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக அனுமதிக்கப்பட்ட 4 நாட்களுமே தடை விதிக்கப்பட்டதால் மலையேற்றத்திற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர்.

 

Edit by Prasanth.K