திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (12:31 IST)

பேருந்தில் சென்ற 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்! - டிரைவர்கள், கண்டக்டர் உட்பட 5 பேர் கைது!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்தி சென்ற 16 வயது சிறுமி பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர் உள்ளிட்டோரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பஞ்சாப் மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 11ம் தேதி மொரதாபாத்தில் இருந்து உத்தரகாண்ட்க்கு பேருந்தில் சென்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டெராடூனில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அதிகாலை 2.30 மணிக்கு சிறுமி வந்தடைந்துள்ளார். சிறுமி பேருந்தில் தனியாக இருப்பதை கவனித்த அந்த அரசு பேருந்தின் டிரைவரும், நடத்துனரும் மேலும் சில டிரைவர்களும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

பின்னர் 13ம் தேதி அதிகாலையில் சிறுமியை இறக்கி விட்டு சென்றுள்ளனர். கொட்வளி படேல் நகர் போலீஸ் சோதனைச்சாவடி அருகே ஆடைகள் கிழிந்த நிலையில் நின்று கொண்டிருந்த சிறுமியை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

 

சிறுமியை மீட்டு சிறுவர் நல காப்பகத்தில் போலீஸார் அனுமதித்த நிலையில் சிறுமிக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சரியாக பேசாமல் இருந்த சிறுமி, பின்னர் தனது ஊரை மொராதாபாத் என்றும், பாட்டியாலா என்றும் மாற்றிக் கூறியுள்ளார். பின்னர் தான் பேருந்தில் பயணித்து வந்ததையும், அப்போது தன்னை சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததையும் சிறுமி கூறியுள்ளார்.
 

 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த காப்பக குழுவினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் அரசு பேருந்தை ஓட்டி வந்த டிரைவர், நடத்துனர் மற்றும் அவர்களோடு சேர்ந்து சிறுமியை வன்கொடுமை செய்த சக டிரைவர்கள் இருவர் மற்றும் ஒரு டிக்கெட் கவுண்டர் கேஷியர் உட்பட 5 நபர்களை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அதேசமயம் சிறுமி ஏன் இரவு நேரத்தில் பஞ்சாபிலிருந்து உத்தரகாண்ட் பயணித்தார் என்றும் விசாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோரை வரவழைத்து விசாரித்தபோது, அந்த சிறுமி இதற்கு முன்னாலும் இதுபோல சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், பெரும் முயற்சி செய்து சிறுமியை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் அவர்கள் கூறியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K